இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தனது மாதாந்திர விலை திருத்தத்தின் ஒரு பகுதியாக, இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்து அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு லீற்றர் ஒன்றின் விலை 289 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையும் லீற்றர் ஒன்றுக்கு 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு. அதன் மூலம் புதிய விலை லிற்றருக்கு 185 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.