மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கு மருந்துப்பொருள்கள் நாளை அன்பளிப்பு

1 week ago

மூளாய் கூட்டுறவு மருத்துவமனையினால் பராமரிக்கப்பட்டும் வயோதிப நோயாளர்களின் பயன்பாட்டுக்காக ஒரு தொகுதி மருந்துப்பொருள்கள் யாழ்ப்பாணக் கல்லூரி 2004 க.பொ.த உயர்தர மாணவர்களினால் நாளை அன்பளிப்புச் செய்யப்படவுள்ளது.


வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் 2004ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதி கல்லூரியிலிருந்து விடுகை பெற்ற மாணவர்களின் மீள் ஒன்றுகூடல் நிகழ்வுகள் நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தொடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) வரை 3 நாள்கள் இடம்பெறவுள்ளன.


அவற்றின் முதல் நிகழ்வாக ஒருதொகுதி மருந்துகள் இவ்வாறு மூளாய் கூட்டுறவு மருத்துவமனைக்கு வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் விருந்துபசார - நினைவூட்டல் நி்கழ்வுகளும் நாளை இடம்பெறவுள்ளன. 


இந்த நிகழ்வுகளை முன்னிட்டு புலம்பெயர்ந்துள்ள 2004 க.பொ.த. உயர்தர பழைய மாணவர்களும் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.