மாவை சேனாதிராஜா மறைவு
7 months ago

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இன்று புதன்கிழமை இரவு காலமானார்.
மறையும் போது அவருக்கு வயது 82 ஆகும்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக நேற்று (28) சேர்ரக்கப்பட்டார்..
வீட்டில் தவறி வீழ்ந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் ழகாரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நேற்றுத் தெரிவித்தார்
மறைந்த மாவை சேனாநிராசாவின் இறுதிச்சடங்கு எதிர்வரும் 02/02/2025, ஞாயிறு பி. ப 3, மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும் எள அறிவிக்கப்பட்டுள்ளது.